சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தையை கொன்ற மகன் கோர்ட்டில் சரண்

Added : செப் 14, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55, கட்டட தொழிலாளி. இவருக்கு சொந்தமாக, 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. திருமணமாகி மனைவி மல்லிகா, 50, மகன் செந்தில்குமார், 35, உள்ளனர். இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த சசிகலா, 48, என்பவரை அர்ஜுனன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் தந்தை மீது செந்தில்குமார் வெறுப்படைந்தார். நிலத்தை சசிகலாவுக்கு

அந்தியூர்: அந்தியூர் அருகே செல்லப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன், 55, கட்டட தொழிலாளி. இவருக்கு சொந்தமாக, 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. திருமணமாகி மனைவி மல்லிகா, 50, மகன் செந்தில்குமார், 35, உள்ளனர். இந்நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்த சசிகலா, 48, என்பவரை அர்ஜுனன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதனால் தந்தை மீது செந்தில்குமார் வெறுப்படைந்தார். நிலத்தை சசிகலாவுக்கு எழுதி வைப்பதாக கூறவே ஆத்திரம் அடைந்தார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இரண்டு நாட்களுக்கு முன் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்று தலைமறைவானார். ஆப்பக்கூடல் போலீசார் அவரை தேடி வந்தனர். திருச்சி நீதிமன்றத்தில், நேற்று சரணடைந்தார். அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க, ஆப்பக்கூடல் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X