ஓமலூரில் ஐந்து நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூரில் ஐந்து நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

Added : செப் 14, 2021
Share
ஓமலூர்: குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி காரணமாக, ஐந்து நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓமலூர் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டில், 3,500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. செவ்வாய்சந்தையில் உள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் சந்தை பகுதி, ஈஸ்வரன் கோவில் தெரு, கடைவீதி உள்ளிட்ட, 3, 4, 12, 13 உள்ளிட்ட வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரே

ஓமலூர்: குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணி காரணமாக, ஐந்து நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓமலூர் பேரூராட்சியில் உள்ள, 15 வார்டில், 3,500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. செவ்வாய்சந்தையில் உள்ள, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் சந்தை பகுதி, ஈஸ்வரன் கோவில் தெரு, கடைவீதி உள்ளிட்ட, 3, 4, 12, 13 உள்ளிட்ட வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரே குழாயில், 400க்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. இதனால், கடைசி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மிக குறைவான குடிநீர் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கூடுதலாக மற்றொரு புதிய குடிநீர் குழாய் பதித்து, பழைய குழாய் இணைப்புகள் சிலவற்றை புதிய குழாய் மூலம் இணைத்து, சீரான குடிநீர் வழங்கும் பணியை நேற்று துவக்கி உள்ளனர். இதனால், வரும் நான்கு நாட்களுக்கு, குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X