பொது செய்தி

தமிழ்நாடு

டவுன் பஸ் குறிப்பிட்ட நேரம் வராததால் மறியல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆத்தூர்: அரசு டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால், பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே, மஞ்சினி, புங்கவாடி கிராமம் வழியாக, கடம்பூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. சில நாட்களாக, பத்து முதல், 15 நிமிடத்துக்கு முன்பாக பஸ் வந்துவிடுவதால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பஸ்சில்

ஆத்தூர்: அரசு டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால், பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே, மஞ்சினி, புங்கவாடி கிராமம் வழியாக, கடம்பூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ், குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. சில நாட்களாக, பத்து முதல், 15 நிமிடத்துக்கு முன்பாக பஸ் வந்துவிடுவதால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பஸ்சில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். நேற்று காலை, 8:30 மணியளவில் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆத்தூர் போக்குவரத்து கிளை பணிமனை அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அலுவலர்கள், 'குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X