பொது செய்தி

தமிழ்நாடு

1.35 கோடி ரூபாய் முறைகேடு: கூட்டுறவு சங்க செயலர் சஸ்பெண்ட்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சேலம்: முறைகேட்டில் ஈடுபட்ட, கூட்டுறவு சங்க செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம், கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் எதிரே செயல்படும், கொளத்தூர் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்க செயலர் சித்திமுருகன், 47. இவர், 2011, ஏப்.,1 முதல், 2015, மார்ச், 3 வரை உறுப்பினர்கள் கடன் கணக்கில் மொத்தம், 1.35 கோடியே, 56 ஆயிரத்து, 994 ரூபாய் முறைகேடு செய்தது, தணிக்கையில் கண்டறியப்பட்டது. அதில், 2011-12ல், 38.88

சேலம்: முறைகேட்டில் ஈடுபட்ட, கூட்டுறவு சங்க செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலம், கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் எதிரே செயல்படும், கொளத்தூர் ஆசிரியர்கள், பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சங்க செயலர் சித்திமுருகன், 47. இவர், 2011, ஏப்.,1 முதல், 2015, மார்ச், 3 வரை உறுப்பினர்கள் கடன் கணக்கில் மொத்தம், 1.35 கோடியே, 56 ஆயிரத்து, 994 ரூபாய் முறைகேடு செய்தது, தணிக்கையில் கண்டறியப்பட்டது. அதில், 2011-12ல், 38.88 லட்சத்து, 548 ரூபாய், 2012-13ல், 55.81 லட்சத்து, 405 ரூபாய், 2013-14ல், 33.54 லட்சத்து, 357 ரூபாய், 2014-15ல், 7.32 லட்சத்து, 684 ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரிந்தது. எனவே செயலர் சித்திமுருகனை, சஸ்பெண்ட் செய்து தலைவர் பிரபு, சமீபத்தில் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செயலருக்கு பதிலாக, காவேரிபுரம் கடன் சங்க எழுத்தர் பழனிவேலுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X