12 கூடுதல் பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 கூடுதல் பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

Added : செப் 14, 2021
Share
சென்னை : கூட்டுறவு துறையில் முக்கிய பதவியாக கருதப்படும், 12 கூடுதல் பதிவாளர்கள், நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரியான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றன. அவருக்கு கீழ் கூடுதல்


சென்னை : கூட்டுறவு துறையில் முக்கிய பதவியாக கருதப்படும், 12 கூடுதல் பதிவாளர்கள், நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு வங்கிகள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, ஐ.ஏ.ஏஸ்., அதிகாரியான கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கீழ் நிர்வாகம் செய்யப்படுகின்றன. அவருக்கு கீழ் கூடுதல் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள் உள்ளனர். மொத்தம், 22 கூடுதல் பதிவாளர்கள் பணியிடங்கள் உள்ளன.

ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, கூட்டுறவு ஒன்றியம் உட்பட, 12 கூடுதல் பதிவாளர்கள், நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.அதில், முந்தைய ஆட்சியாளர்களுக்கு வேண்டிய நபர்களாக இருந்து, முக்கிய பதவிகளில் இருந்த சிலருக்கு, மீண்டும் அதற்கு இணையாக பதவிகளே வழங்கப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X