தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு

Added : செப் 14, 2021
Share
ஓமலூர்: தாரமங்கலம் பவளத்தானூரில் கடந்த, 11ல், காலையில் எஸ்.ஐ.,முரளிதரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஒன்றரை லிட்டர் கொள்ளளவு கொண்டு பாக்கெட்டில், தலா ஒரு லிட்டர் சாராயம் என, 120 லிட்டர் சாராயத்தை, சுசூகி அக்சஸ் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில், இருவர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். எஸ்.ஐ.,முரளிதரன் அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் சாராயத்தை கைப்பற்றி, ஜலகண்டாபுரம்

ஓமலூர்: தாரமங்கலம் பவளத்தானூரில் கடந்த, 11ல், காலையில் எஸ்.ஐ.,முரளிதரன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஒன்றரை லிட்டர் கொள்ளளவு கொண்டு பாக்கெட்டில், தலா ஒரு லிட்டர் சாராயம் என, 120 லிட்டர் சாராயத்தை, சுசூகி அக்சஸ் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில், இருவர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். எஸ்.ஐ.,முரளிதரன் அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் சாராயத்தை கைப்பற்றி, ஜலகண்டாபுரம் ஓம் சக்தி நகரை சேர்ந்த மாதேசன், 47, தெசவிளக்கை சேர்ந்த சீனிவாசன், 52. (தாரமங்கலம் ஒன்றியம், 12வது வார்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் மாதேசை கைது செய்தனர். தலைமறைவான சீனிவாசனை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X