சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகரை கரைக்க சென்ற சிறுவன் ஏரி நீரில் மூழ்கி பலி

Added : செப் 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், குருவிப்பனை ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.சேலம், செவ்வாய்ப்பேட்டை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் தீபக்குமார், 13. அவரது தம்பி யுவராஜ்,12. இவர்கள் தங்களது வீட்டில், ஒரு அடி உயர விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்துள்ளனர். நேற்று அந்த சிலையை கரைப்பதற்கு, அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன்

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், குருவிப்பனை ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானார்.


சேலம், செவ்வாய்ப்பேட்டை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுப்பிரமணி மகன்கள் தீபக்குமார், 13. அவரது தம்பி யுவராஜ்,12. இவர்கள் தங்களது வீட்டில், ஒரு அடி உயர விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்துள்ளனர். நேற்று அந்த சிலையை கரைப்பதற்கு, அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் கோபாலகிருஷ்ணன், 13, ஆஜாம் மகன் இம்ரான், 13, ஆகிய நான்கு பேரும் நேற்று மாலை, 4:30 மணிக்கு சிலையுடன் கிச்சிப்பாளையம், குருவிப்பனை ஏரிக்கு சென்றுள்ளனர். சிலையை கரைத்த பின், ஏரியில் நான்கு பேரும் குளித்தனர். இதில், மூன்று பேர் வெளியேறி விட்ட நிலையில், இம்ரான் தண்ணீரில் மூழ்கி விட்டார். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் தேடி, ஏரியில் இருந்து சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X