ஒடிசாவில் புயல்: பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : வங்க கடலில் உருவான புயலால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசா சந்த்பாலி துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 80 கி.மீ.,துாரத்திலும், ஒடிசா பாரதீப் துறைமுகத்தில் இருந்து கிழக்கில் 70 கி.மீ., துாரத்திலும், ஒடிசா பாலசோர்
 ஒடிசாவில் புயல்: பாம்பனில்  1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்


ராமேஸ்வரம் : வங்க கடலில் உருவான புயலால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசா சந்த்பாலி துறைமுகத்தில் இருந்து தென் கிழக்கில் 80 கி.மீ.,துாரத்திலும், ஒடிசா பாரதீப் துறைமுகத்தில் இருந்து கிழக்கில் 70 கி.மீ., துாரத்திலும், ஒடிசா பாலசோர் துறைமுகத்தில் இருந்து தென்கிழக்கில் 140 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது.தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று காலை 8:05 மணிக்கு பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், பாம்பன் கடற்கரையில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட அறிவுறுத்தப்பட்டது. நேற்று காலை புயல் ஒடிசா கடற்கரையை கடந்ததும், புயல் எச்சரிக்கை ரத்தானது. நேற்று மதியம் 1:50 மணிக்கு பாம்பனில் புயல் கூண்டு இறக்கப்பட்டது.

மணல் புயல்:
இருப்பினும் நேற்று ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியால், தனுஷ்கோடியில் மணல் புயல் வீசியது. இதனால் தனுஷ்கோடி சாலையில் பல இடத்தில் மணல் மூடியதால், நேற்று சுற்றுலா வாகனங்கள் சிரமத்துடன் சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X