சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவன் உட்பட 3 பேர் மீது வழக்கு

Added : செப் 14, 2021
Share
Advertisement
அரூர்: கடத்தூர் அருகே, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்ளிட்ட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடத்தூர் அடுத்த நத்தமேட்டை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 28. இவருக்கும் அஸ்தகிரியூரை சேர்ந்த சத்யா, 24, என்பவருக்கும் கடந்த, 2018ல் திருமணமானது. இவர்களது குழந்தை பிரிநிதி, 3; திருமணத்தின்போது, சத்யாவிற்கு, 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் சீதனமாக அவரது

அரூர்: கடத்தூர் அருகே, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்ளிட்ட, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கடத்தூர் அடுத்த நத்தமேட்டை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன், 28. இவருக்கும் அஸ்தகிரியூரை சேர்ந்த சத்யா, 24, என்பவருக்கும் கடந்த, 2018ல் திருமணமானது. இவர்களது குழந்தை பிரிநிதி, 3; திருமணத்தின்போது, சத்யாவிற்கு, 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் சீதனமாக அவரது பெற்றோர் கொடுத்துள்ளனர். வெங்கடேஸ்வரன் அவரது பெற்றோர் பேச்சை கேட்டு, சத்யாவை ஓட்டு வீட்டில் தனியாக வசிக்க வைத்துள்ளார். மேலும், மாமனார் பச்சமுத்து, மாமியார் முனியம்மாள் இருவரும் சத்யாவை தகாத வார்த்தையால் பேசி, கணவருடன் வாழவிடாமல் மனஉளைச்சலை ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சத்யா புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வெங்கடேஸ்வரன் அவரது பெற்றோர் உள்பட, மூவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X