சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை கத்தியால் வெட்டியவர் அதிரடி கைது

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், கட்டட தொழிலாளியை கத்தியால் வெட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், புது வாணியூர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், 25. கட்டட தொழிலாளி; இவர், ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த உறவினர் பார்த்திபன், 20, என்பவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். கடந்த, 11ல் இரவு, 9:00 மணிக்கு, பேடரப்பள்ளியிலுள்ள தனியார் பள்ளி முன் அமர்ந்து இருவரும் மது

ஓசூர்: ஓசூரில், கட்டட தொழிலாளியை கத்தியால் வெட்டிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், புது வாணியூர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், 25. கட்டட தொழிலாளி; இவர், ஓசூர் பேடரப்பள்ளியை சேர்ந்த உறவினர் பார்த்திபன், 20, என்பவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். கடந்த, 11ல் இரவு, 9:00 மணிக்கு, பேடரப்பள்ளியிலுள்ள தனியார் பள்ளி முன் அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, ஓசூர் பேடரப்பள்ளி நேதாஜி நகரில் தங்கி டிரைவராக பணியாற்றி வரும், திருப்பத்தூர் மாவட்டம், அவல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ஸ்ரீகாந்த், 35, என்பவர் அவ்வழியாக சென்றார். அந்த நேரத்தில், வழிப்பாதை தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் கத்தியால் மணிவண்ணனின் இடது கை, கால், தலையின் பின்புறம் ஆகிய இடங்களில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, மணிவண்ணன் புகாரின்படி, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X