பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானு ரெட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை யில் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி, 100 சதவீதம் சரிபார்ப்பு பணி கடந்த ஆக., 25ல் தொடங்கி கடந்த, 10

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திர பானு ரெட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலை யில் வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி, 100 சதவீதம் சரிபார்ப்பு பணி கடந்த ஆக., 25ல் தொடங்கி கடந்த, 10 வரை நடந்தது. இதில், 1,500 வாக்காளர்களுக்கு மேலுள்ள ஒன்பது வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தும், பழுதடைந்த, 16 வாக்குச்சாவடிகள் கட்டடம், இடமாற்றம் செய்தும் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 1,863 வாக்குச்சாவடிகளில், தற்போது கூடுதலாக ஒன்பது வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் இருப்பின், அரசியல் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில் அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு ஒருவார காலத்திற்குள் மனு செய்யலாம். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சதீஷ், ஓசூர் சப்கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X