தீயணைப்பு துறையினர் ஒத்திகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீயணைப்பு துறையினர் ஒத்திகை

Added : செப் 14, 2021
Share
கிருஷ்ணகிரி: எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி, தீயணைப்புத்துறையினர் சார்பில், எச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை பயிற்சி கே.ஆர்.பி., அணையில் நடந்தது. கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமை வகித்தார். ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில், பருவமழையின் போது நீர் நிரம்பும். அப்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க, நீரில்

கிருஷ்ணகிரி: எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி, தீயணைப்புத்துறையினர் சார்பில், எச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை பயிற்சி கே.ஆர்.பி., அணையில் நடந்தது. கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமை வகித்தார். ஏரி, ஆறு, குளம், கிணறு மற்றும் அணைகளில், பருவமழையின் போது நீர் நிரம்பும். அப்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க, நீரில் விழுந்தவர்களை காப்பாற்றவும், நீரில் அடித்து செல்வோரை எப்படி காப்பாற்றுவது எனவும் ஒத்திகை பயிற்சி செய்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியை, கே.ஆர்.பி., அணைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் உள்பட பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

* ஊத்தங்கரை, தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. பொதுமக்கள் முன்னிலையில், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X