குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்

Added : செப் 14, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், மாவட்டத்தில் தளி, கெலமங்கலம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய ஒன்றியங்களிலுள்ள கிராமங்களுக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், மாவட்டத்தில் தளி, கெலமங்கலம், ஊத்தங்கரை, மத்தூர் ஆகிய ஒன்றியங்களிலுள்ள கிராமங்களுக்கு தொடர்ந்து, 20 நாட்கள் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யவுள்ளது. இப்பிரசார வாகனமானது குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பின் அவசியம், போக்சோ சட்டம், இளஞ்சிறார் நீதிச்சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் குறித்து, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் பேசினார். நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X