மெல்ல அதிகரிக்குது கொரோனா : பொதுமக்களே அலட்சியம் வேண்டாம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
மதுரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா கூடுவதும் குறைவதுமாக உள்ளது. தேர்தல் ஒட்டி கட்டுப்பாடுகளின்றி நடந்த பிரசாரத்தால் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.



மதுரை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்றரை ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைத்து வரும் கொரோனா கூடுவதும் குறைவதுமாக உள்ளது. தேர்தல் ஒட்டி கட்டுப்பாடுகளின்றி நடந்த பிரசாரத்தால் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுதும் ஆக்சிஜனுக்காக மக்கள் அல்லாட வேண்டியிருந்தது. அதன் பின்னர் எடுத்த நடவடிக்கைகள், தடுப்பூசி செலுத்துவதில் வேகம் ஆகியவை காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது.

இந்திய அளவில் மகாராஷ்டிரம், கேரளத்தில் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கைக்குப்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, கட்டுப்பாடுகள் போன்றவற்றால் பாதிப்பு குறையத்துவங்கியது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மீண்டும் பாதிப்புகள் படிப்படியாக உயரத்துவங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செப். துவக்கம் முதல் தமிழகத்தில் தினமும் 1500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செப். 1ல் 1508 ஆக இருந்த பாதிப்பு செப். 11ல் 1639 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியும் செப். 1ல் 20 ஆக இருந்தது செப்.11ல் 27 ஆக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களாக 1600 ஐ நெருங்கி வருகிறது. தினசரி உயிரிழப்பும் 20க்கு மேல் உள்ளது.மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், சென்னை, கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் கட்டுப்படவில்லை.

சென்னையில் நேற்றைய பாதிப்பு 185, கோவையில் 204, ஈரோட்டில் 137 ஆகவும் உள்ளது.எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.n கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.n முகக்கவசம் அணிவது கட்டாயம்.n சானிடைசர் பயன்படுத்துங்கள்.n தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம்.n அவசிய தேவையின்றி வெளியூர் செல்ல வேண்டாம்.n செல்லும் இடங்களிலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடியுங்கள்.மூன்றாம் அலையை தவிர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X