பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் கூடுதல் மகசூலுக்கு துத்தநாக சத்து மேலாண்மை

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 24 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. இதற்கு துத்தநாக சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. துத்தநாகச்சத்து குறையை போக்க, தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்யாமல், இடையிடையில் மாற்று பயிர்களை பயிரிட வேண்டும். வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 24 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. இதற்கு துத்தநாக சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. துத்தநாகச்சத்து குறையை போக்க, தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்யாமல், இடையிடையில் மாற்று பயிர்களை பயிரிட வேண்டும். வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெற்பயிரில் துத்தநாக பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணம். எனவே, நெற்பயிரின் வளர்ச்சி பருவத்திலும், பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும்போதும், வயலில் தேங்கிய நீரை வடித்து, போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவில் இட வேண்டும். நடவிற்கு முன் துத்தநாக சல்பேட்டை ஏக்கருக்கு, 10 கிலோவை, 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். நாற்றின் வேர்ப்பகுதியை, ஒரு சதவீதம் துத்தநாக சப்பேட் கரைசலில், 10 நிமிடங்கள் நனைத்து நடலாம். அறிகுறிகள் தென்பட்ட பின், 0.5 சதவீத துத்தநாக சப்பேட் கரைசலை, 0.25 சதம் தெளிந்த சுண்ணாம்பு கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X