பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மகளிர் கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளங்கலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவியர் கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். மதிப்பெண் பட்டியல்கள், ஜாதி,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளங்கலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்காத மாணவியர் கல்லூரி அலுவலகத்தில் நேரடியாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும். மதிப்பெண் பட்டியல்கள், ஜாதி, மாற்றுச்சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள் அசல் மற்றும் மூன்று நகல்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்றும் கட்டாயம் எடுத்து வர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் கலைப்பாடப்பிரிவிற்கு, 2,200 ரூபாய், அறிவியல் பாடப்பிரிவிற்கு, 2,250 ரூபாய். கலந்தாய்விற்கு வரும் மாணவியர் மற்றும் பெற்றோர் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X