பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் அட்டகாசம்: விவசாய நிலத்துக்கு செல்ல விவசாயிகள் அச்சம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது. இங்கு கொங்கனப்பள்ளி, எப்ரி, ஏக்கல்நத்தம் ஆகிய வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட யானைகள் குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளன. யானைகளை தமிழக வனத்துறையினர், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டினால், அம்மாநில வனத்துறையினர் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் உள்ளது. இங்கு கொங்கனப்பள்ளி, எப்ரி, ஏக்கல்நத்தம் ஆகிய வனப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட யானைகள் குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளன. யானைகளை தமிழக வனத்துறையினர், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு விரட்டினால், அம்மாநில வனத்துறையினர் மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு விரட்டி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன், வேப்பனஹள்ளி அருகே ஊருக்குள் புகுந்த ஒன்றை யானை, தோட்ட காவலுக்கு இருந்த இரு விவசாயிகளை தாக்கி கொன்றது. நேற்று அதிகாலை ஏக்கல்நத்தம் மலையில் குட்டி களுடன் முகாமிட்டுள்ள, 10க்கும் மேற்பட்ட யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, தென்னை, மா, பூச்செடிகள், தண்ணீர் குழாய்கள், முள்வேலிகள், மின் மோட்டார்கள் என அனைத்தையும் மிதித்து சேதப்படுத்தின. கடந்த, 10 நாட்களில் மகாராஜகடை பகுதியில் மட்டும், 100 ஏக்கர் விவசாய நிலங்களை யானைகள் நாசமாக்கி உள்ளன. இதனால், இப்பகுதியில் பகலிலேயே விவசாய நிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கையை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X