கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபீஸ் விவகாரம் நிலம் மதிப்பீடுக்கு இருவர் நியமனம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட கோவில் நிலத்தை மதிப்பீடு செய்ய, இரு மதிப்பீட்டாளர்களை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிதாக துவங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு

சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு, கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட கோவில் நிலத்தை மதிப்பீடு செய்ய, இரு மதிப்பீட்டாளர்களை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக துவங்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்ட, வீரசோழபுரத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிகளுக்கான நடவடிக்கையும் துவங்கியது.கோவில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம் கட்ட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உள்ளிட்ட சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், கோவில் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதற்காக மதிப்பீடு செய்ய, தனிப்பட்ட மதிப்பீட்டாளர்கள் இருவரை, அட்வகேட் ஜெனரல் பரிந்துரைக்கும்படி முதல் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, பெரியசாமி, குழந்தைவடிவேல் என இரண்டு மதிப்பீட்டாளர்களின் பெயரை தெரிவித்தார். இரண்டு மதிப்பீட்டாளர்களையும் நியமித்து, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தனித்தனியாக மதிப்பீடு செய்து, சீலிட்ட உறையில் மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

கோவிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என, அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்ததையும், முதல் பெஞ்ச் பதிவு செய்தது. மேலும், கோவில் புனரமைப்புக்கு முதல் கட்டமாக, 2 கோடி ரூபாயை டிபாசிட் செய்யவும் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X