பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தர்மபுரி தி.மு.க., - எம்.பி., சவால்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு தர்மபுரி தி.மு.க., - எம்.பி., சவால்

Added : செப் 14, 2021
Share
தர்மபுரி: 'என் செயல்பாடுகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க, பா.ஜ., தலைவர் அண்ணாமலை தயாரா' என, தர்மபுரி தொகுதி, தி.மு.க.,- எம்.பி., செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.தர்மபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில், 11.5 லட்சம் ரூபாய் திட்டச்செலவில், நவீன கழிவறையை திறந்து வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில

தர்மபுரி: 'என் செயல்பாடுகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க, பா.ஜ., தலைவர் அண்ணாமலை தயாரா' என, தர்மபுரி தொகுதி, தி.மு.க.,- எம்.பி., செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.
தர்மபுரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில், 11.5 லட்சம் ரூபாய் திட்டச்செலவில், நவீன கழிவறையை திறந்து வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன் தர்மபுரி வந்த, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, என்னை, 'டுவிட்டர் நாயகன்' என, கூறினார். என்னை பாராட்டும் வகையில் கூறியிருந்தால் வரவேற்கிறேன். ஏனென்றால், எனக்கு வரும் டுவிட்டர் மூலம் பலருக்கு உதவி செய்கிறேன். டுவிட்டரில் மட்டுமல்ல, லோக்சபாவிலும் என்னுடைய செயல்பாடுகள் முதலிடத்தில் உள்ளது. பா.ஜ., மக்கள் பிரதிநிதி அலுவலகத்தில் உள்ளதுபோல் பணம் எண்ணும் இயந்திரம் என் அலுவலகத்தில் இல்லை. என்னை விமர்சனம் செய்யும், பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் செயல்பாடுகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X