சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீஸ் முன் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
தர்மபுரி: கணவரின் இரண்டாம் திருமண முயற்சி குறித்து புகார் தெரிவித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காத விரக்தியில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றார்.தர்மபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த அஸ்தகிரியை சேர்ந்த சத்யா, 24 என்பவருக்கும், நத்தமேட்டை சேர்ந்த ரயில்வே கேங்மேன் வெங்கடேஸ்வரன், 28, என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு

தர்மபுரி: கணவரின் இரண்டாம் திருமண முயற்சி குறித்து புகார் தெரிவித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காத விரக்தியில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், குழந்தையுடன் இளம்பெண் தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த அஸ்தகிரியை சேர்ந்த சத்யா, 24 என்பவருக்கும், நத்தமேட்டை சேர்ந்த ரயில்வே கேங்மேன் வெங்கடேஸ்வரன், 28, என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, வெங்கடேஸ்வரனின் பெற்றோர் வரதட்சணையை காரணம் காட்டி அவருக்கு, இரண்டாம் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர். இதுகுறித்து சத்யா, அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில், நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தன் மூன்று வயது பெண் குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் அவர்களை மீட்டு விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X