பொது செய்தி

தமிழ்நாடு

தேன்கனிக்கோட்டைக்கு இடம் பெயர்ந்த ஆட்கொல்லி யானை; வனத்துறை எச்சரிக்கை

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஓசூர்: ஆட்கொல்லி ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே கடந்த, 10ல் விவசாயிகள் இருவரை கொன்ற ஒற்றை ஆட்கொல்லி யானை, நேற்று முன்தினம் அதிகாலை, பச்சப்பனட்டியை சேர்ந்த வெங்கடேசன், 65, என்பவரை தாக்கி கொன்றது. ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து, வெளியேறிய யானை,

ஓசூர்: ஆட்கொல்லி ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டுள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே கடந்த, 10ல் விவசாயிகள் இருவரை கொன்ற ஒற்றை ஆட்கொல்லி யானை, நேற்று முன்தினம் அதிகாலை, பச்சப்பனட்டியை சேர்ந்த வெங்கடேசன், 65, என்பவரை தாக்கி கொன்றது. ஊடேதுர்க்கம் வனப்பகுதியிலிருந்து, வெளியேறிய யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகம், போன்பள்ளம் வனப்பகுதிக்கு நேற்று அதிகாலை இடம் பெயர்ந்தது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர், ஜவளகிரி வனப்பகுதி வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு அதை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒற்றை யானையால் மேலும் உயிர்பலி ஏற்படாமல் தடுக்க, அகலகோட்டை, படிகநாளம், ஜவளகிரி, பாலதொட்டனப்பள்ளி, லக்கசந்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில், நேற்று முன்தினம் இரவிலிருந்து மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இரவில் தனியாக விவசாய நிலத்துக்கோ, ஆடு, மாடு மேய்க்க வனப்பகுதிக்குள்ளோ செல்ல வேண்டாம். இரவில் வீட்டின் முன், விளக்குகளை எரிய விட வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X