பொது செய்தி

தமிழ்நாடு

பாலேகுளி ஏரியில் இருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பாலேகுளி ஏரியிலிருந்து சந்தூர் வரையுள்ள, 28 ஏரிகளுக்கு நேற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 12ல், 50 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழையால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறப்புக்கு முன், வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப, கே.ஆர்.பி., அணை உபரிநீர்

கிருஷ்ணகிரி: பாலேகுளி ஏரியிலிருந்து சந்தூர் வரையுள்ள, 28 ஏரிகளுக்கு நேற்றிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் கடந்த, 12ல், 50 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழையால், விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை உள்ளது. எனவே அணையிலிருந்து ஆற்றில் தண்ணீர் திறப்புக்கு முன், வாய்க்கால் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப, கே.ஆர்.பி., அணை உபரிநீர் நீடிப்பு இடதுபுற வாய்க்கால் பயன்பெறுவோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று பாலேகுளி முதல் சந்தூர் வரையுள்ள, 28 ஏரிகளுக்கு, பாலேகுளி ஏரியிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. பாரூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், சங்கத்தலைவர் சிவகுரு உள்பட பலர் பங்கேற்றனர் முன்னதாக, 28 ஏரி வாய்க்கால்களை அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் தூர்வாரி சுத்தம் செய்தனர். கடந்த, 2013 முதல் கே.ஆர்.பி., அணை வாய்க்கால் மூலம், 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆனால், ஒரு ஆண்டுகூட, 28 ஏரிகளும் முழுமையாக நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏரிகள் நிரம்பும் வகையில் வாய்க்காலை அகலமும், ஆழப்படுத்தியும் தர, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X