பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,- எம்.பி., அலுவலகம் முன் பா.ம.க., கொடிக்கம்பம்? போலீஸ் குவிப்பு; வருவாய்த்துறையினர் ஆய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் நான்கு ரோட்டில், தி.மு.க.,- எம்.பி., அலுவலக நுழைவு வாயில் பகுதியில், பா.ம.க.,வின் கொடிக்கம்பத்தை நட, அக்கட்சியினர் முயற்சித்ததையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.சேலம், நான்கு ரோடு சந்திப்பில், தி.மு.க.,- எம்.பி., பார்த்திபனின் அலுவலகம் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், பா.ம.க., கொடிக்கம்பம் இருந்தது. இதற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி,

சேலம்: சேலம் நான்கு ரோட்டில், தி.மு.க.,- எம்.பி., அலுவலக நுழைவு வாயில் பகுதியில், பா.ம.க.,வின் கொடிக்கம்பத்தை நட, அக்கட்சியினர் முயற்சித்ததையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.
சேலம், நான்கு ரோடு சந்திப்பில், தி.மு.க.,- எம்.பி., பார்த்திபனின் அலுவலகம் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன், பா.ம.க., கொடிக்கம்பம் இருந்தது. இதற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி, மாநகராட்சி, போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றினர். இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு விசாரணையில் உள்ளது.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்: இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பா.ம.க.,வினர் கொடிக்கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நட முயற்சித்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததால், இரவு முதல் அந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 5:30 மணிக்கு மீண்டும் கொடிக்கம்பம் நடப்பட்ட நிலையில், தாசில்தார் செம்மலை தலைமையிலான வருவாய்த்துறையினர் கம்பத்தை அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த, பா.ம.க., மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் கம்பம் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பா.ம.க.,வினர் கலைந்து சென்றனர். இந்நிலையில் காலை, 10:30 மணிக்கு ஆர்.டி.ஓ., விஷ்ணு வர்த்தினி சம்பவ இடத்தை ஆய்வு செய்து, வருவாய்த்துறையினருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின் இந்த பிரச்னை தொடர்பாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

30 ஆண்டுகளாக...: இது குறித்து, பா.ம.க., மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராசரத்தினம் கூறியதாவது: எம்.பி., பல்வேறு கட்சியில் இருந்து விட்டு இப்போது, தி.மு.க.,வில் உள்ளார். சேலத்தில் எம்.எல்.ஏ.,க்களுக்கு தான் அரசு சார்பில் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.,க்கு இல்லை. அவர் சொந்த கட்டடத்தை அலுவலகமாக பயன்படுத்துகிறார். அந்த கட்டடத்தை அவர் வாங்குவதற்கு முன்பாகவே, 30 ஆண்டுகளாக அந்த இடத்தில், பா.ம.க., கொடிக்கம்பம் உள்ளது. அதிகாரிகள் எம்.பி.,க்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வரும், 15ல், பா.ம.க., தலைவர் மணி தலைமையில் அந்த இடத்தில் கொடி ஏற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தலைமைக்கு தகவல்: இது குறித்து, தி.மு.க., - எம்.பி., பார்த்திபன் கூறியதாவது: சிலர் தூண்டுதலின் பேரில், பா.ம.க.,வினர் பிரச்னை செய்கின்றனர். இது குறித்து, தி.மு.க.,வின் தலைமைக்கு தெரிவிக்க உள்ளேன். பிரச்னையை தூண்டி விடுவது யார் என்பது உளவு அமைப்புகளுக்கும் தெரியும். தி.மு.க., ஆட்சிக்கும், என் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்புக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பா.ம.க.,வினர் செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X