சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் - கோவை நெடுஞ்சாலையில் குட்டிக்கரணம் போட்ட கார்; பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மகன் உயிர் தப்பினார்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பட்டர்பிளை பாலத்தில் கார் குட்டிக்கரணம் போட்ட விபத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனின் மகன் உயிர் தப்பினார்.சென்னை, மந்தைவெளி, பட்டம்மாள் தெருவை சேர்ந்த சீனிவாசன், வானதி சீனிவாசன் தம்பதியரின் மகன் ஆதர்ஷ்,23. வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆதர்ஷ் நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து மாருதி

சேலம்: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், பட்டர்பிளை பாலத்தில் கார் குட்டிக்கரணம் போட்ட விபத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனின் மகன் உயிர் தப்பினார்.
சென்னை, மந்தைவெளி, பட்டம்மாள் தெருவை சேர்ந்த சீனிவாசன், வானதி சீனிவாசன் தம்பதியரின் மகன் ஆதர்ஷ்,23. வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஆதர்ஷ் நேற்று முன்தினம் இரவு, கோவையில் இருந்து மாருதி பெலினோ காரில், சென்னையை நோக்கி சென்றார். காரை அவர் ஓட்டி வந்த நிலையில், இரவு 11:15 மணியளவில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பட்டர்பிளை பாலத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே இறங்கிய போது, திருப்பத்தில் கார் நிலைதடுமாறி, தடுப்பு சுவரில் மோதி குட்டிக்கரணம் போட்டது. காரை ஓட்டி வந்த ஆதர்ஷ், 'சீட் பெல்ட்' அணிந்து இருந்ததால், உடலில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். அன்னதானப்பட்டி போலீசார், சேலம் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள், ஆதர்ஷை, நான்கு ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, வேறு ஒரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். குட்டிக்கரணம் போட்ட காரை, அன்னதானப்பட்டி போலீசார் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதர்ஷ் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா, பாலத்தின் திருப்பத்தில் விளக்குகள் இல்லாதது விபத்துக்கு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X