'கருணை' வேலை யாருக்கு ? : உச்ச நீதிமன்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'கர்நாடக மாநில சிவில் சர்வீஸ் சட்ட விதிகள், 1996ன்படி, இறந்த அரசு ஊழியரின் திருமணமாகாத மகளுக்கோ அல்லது அவரை நம்பியிருந்த அவரது விதவையான மகளுக்கோ தான், கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் இறந்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்டு. அவரது விவாகரத்தான


புதுடில்லி : 'கர்நாடக மாநில சிவில் சர்வீஸ் சட்ட விதிகள், 1996ன்படி, இறந்த அரசு ஊழியரின் திருமணமாகாத மகளுக்கோ அல்லது அவரை நம்பியிருந்த அவரது விதவையான மகளுக்கோ தான், கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உண்டு' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் இறந்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்டு. அவரது விவாகரத்தான மகள் மனு செய்தார்.ஆனால், 'கர்நாடக சிவில் சர்வீஸ் சட்டப்படி, இறந்த அரசு ஊழியரை நம்பியிருந்த திருமணமாகாத மகள் அல்லது விதவையான மகள் ஆகியோருக்கு மட்டுமே, கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது' என, கர்நாடக அரசு நிர்வாக தீர்ப்பாயம் தெரிவித்தது

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து, விவாகரத்தான மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

கர்நாடக சிவில் சட்ட விதிகள், 1996ன்படி, இறந்த அரசு ஊழியரை நம்பியிருந்த திருமணமாகாத மகள் அல்லது விதவையான மகள் ஆகியோருக்கு மட்டுமே, கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது. இதில், விவாகரத்தான மகளுக்கும் உரிமை உள்ளது என கூறப்படவில்லை.கர்நாடக சிவில் சர்வீஸ் சட்ட விதிகளில், 2021ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் தான், விவாகரத்தான மகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை உள்ளது என, கூறப்பட்டுள்ளது.

அதனால் முன்பேயே தொடரப்பட்ட இந்த வழக்கில், விவாகரத்தான மகளுக்கு, கருணை அடிப்படையில் வேலை பெற உரிமை இல்லை. இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X