பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா வியாபாரியை கைது செய்யாததால் வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Added : செப் 14, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: கஞ்சா வியாபாரியை, முன் கூட்டியே கைது செய்யாத வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராக கோவிந்தசாமி பணிபுரிகிறார். கடந்த ஜூலை, 26ல் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் என்பவர் உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்து எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 மொபைல் போன்கள்

வாணியம்பாடி: கஞ்சா வியாபாரியை, முன் கூட்டியே கைது செய்யாத வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டராக கோவிந்தசாமி பணிபுரிகிறார். கடந்த ஜூலை, 26ல் வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் என்பவர் உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்து எட்டு கிலோ கஞ்சா, 10 பட்டா கத்திகள், 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இம்தீயாஷ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளரான வசீம் அக்ரம், 40, கடந்த, 10ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை ஓட்டேரி கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் என்ற ரவி, டில்லிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் குறித்து போலீசாருக்கு அடிக்கடி தகவல் சொன்னதால், இம்தீயாஷ் ஏற்பாட்டின்படி, வசீம் அக்ரத்தை கொலை செய்ததும், இதற்காக, 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது. இம்தீயாஷ்சை கைது செய்திருந்தால், கொலை நடந்திருக்காது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து நடத்திய விசாரணையில், இம்தீயா ஷை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மது பாட்டில், கள்ளச்சாராயம், ரேஷன் அரிசி கடத்தல் போன்ற விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, 50, இருந்தது தெரியந்தது. இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து, வேலூர் டி.ஐ.ஜி., பாபு நேற்று உத்தரவிட்டார்.


எஸ்.பி., மாற்றம்: சில தினங்களுக்கு முன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., சிபிச்சக்கரவர்த்தி சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய எஸ்.பி.,யாக பால கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க தவறியதால், சிபிச்சக்கரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. கஞ்சா வியாபாரி இம்தீயாஷ் குறித்து, வசீம் அக்ரம் அடிக்கடி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது அடுத்த நிமிடமே கஞ்சா வியாபாரிக்கு தெரிந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷனிலேயே உள்ள சிலர், பணத்தாசை காரணமாக கஞ்சா வியாபாரிக்கு வசீம் அக்ரம் குறித்து தகவல் கொடுத்து வந்துள்ளனர். அந்த கருப்பு ஆடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விளக்கம் கேட்டு டி.எஸ்.பி.,க்கு நோட்டீஸ்: கஞ்சா வியாபாரியை கைது செய்ய தவறிய வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, 50, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், இம்தீயா ஷை பிடிக்கத் தவறிய வாணியம்பாடி டி.எஸ்.பி., பழனிக்கு விளக்கம் கேட்டு, வேலூர் சரக டி.ஐ.ஜி., பாபு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X