அரசியல் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் தனியாக வெளிநடப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை : சட்டசபையில் நேற்று நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அனைவரும் வெளியேறிய பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சபைக்கு வந்தனர்.அவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு கோரினர். இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கே.பி.முனுசாமி தன் தொகுதியில், யானை தாக்கி இறந்த இரு


சென்னை : சட்டசபையில் நேற்று நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அனைவரும் வெளியேறிய பின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் சபைக்கு வந்தனர்.அவர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு கோரினர்.

இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கே.பி.முனுசாமி தன் தொகுதியில், யானை தாக்கி இறந்த இரு விவசாயிகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர் பதில் அளித்தபின், அவர் தொடர்ந்து பேச அனுமதி கோரினார்; சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவர் தனி ஆளாக வெளியேறினார்.

இதுகுறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ''நிகழ்ச்சி நிரலில் உள்ள தீர்மானமாக இருந்தால், இரண்டு கேள்விக்கு அனுமதி அளிக்கப்படும். நேரமில்லா நேரத்தில் ஒரு கேள்வி கேட்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதன்படி கே.பி.முனுசாமி ஒரு கேள்வி கேட்டார்; அமைச்சரும் பதில் அளித்தார். அதன்பிறகும் அவர் வெளிநடப்பு செய்துள்ளார்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X