அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : செப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தி.மு.க., வின் அரசியல் நாடகம் அம்பலமானது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம். இன்னொரு நாள், இன்னொரு பொய், அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு. விவசாய சட்டம் தவறா? சி.ஏ.ஏ., தவறா? நீட் தவறா? எங்கே தவறு?- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அந்தந்த மாநில மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற உரிய


தி.மு.க., வின் அரசியல் நாடகம் அம்பலமானது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம். இன்னொரு நாள், இன்னொரு பொய், அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு. விவசாய சட்டம் தவறா? சி.ஏ.ஏ., தவறா? நீட் தவறா? எங்கே தவறு?- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.

பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அந்தந்த மாநில மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற உரிய பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த அரைநுாற்றாண்டு காலமாக மொழி மற்றும் கல்வியை வைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்.

அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை ம.நீ.ம., வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்.- கமல், ம.நீ.ம., தலைவர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தியது இதுவே முதல் முறை. தமிழக அரசுக்கு பாராட்டுகள். உ.பி.,யில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தியதுதான் இந்திய சாதனை. அதை தமிழக அரசு விரைவில் முறியடிக்க வேண்டும்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.

அரசுத் துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழக அரசின் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனும் அறிவிப்பை வி.சி., வரவேற்கிறது. தமிழக அரசு, முதல்வருக்கு நன்றி.- திருமாவளவன், வி.சி., தலைவர்.

பாரதியார் பாடலை பாடி அவர் நினைவு நுாற்றாண்டில் அஞ்சலி செலுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அவர் அறிந்துகொள்ள வேண்டிய பாரதியார் பாடல், "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ" என்பதுதான். பொதுத்துறைகளை பொதுச் சொத்துக்களை காப்போம்.- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-செப்-202102:44:34 IST Report Abuse
BASKAR TETCHANA அய்யா மருத்துவரே எப்படி கோரோனோ ஊசி தமிழகத்தில் 28.36 லட்சம் பேருக்கு ஊசி போட்டார்களா அதே போல் உ.பி யில் 33.42 லட்சம் ஊசி போட்டு அந்த சாதனையை தமிழகம் முறியடிக்க வேண்டும். எப்படி அய்யா ஒரே ஆளுக்கு மூன்று ஊசிகள் அதுவும் ஒரே நாளில் போட்டால் தான் சாதனை செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழகத்தில் தற்போது இப்படி தான் நடக்கிறது ஒரே ஆளுக்கு இரண்டு அல்லது மூன்று ஊசிகள் போடுகின்றனர். நல்ல விவாகம். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
14-செப்-202117:14:06 IST Report Abuse
Believe in one and only God நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசு. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுத்க்து. மத்திய அரசு உதவ வில்லை. இதற்க்கு தமிழக அரசை குறை சொல்வது முட்டாள்தனம். நீட் தேர்வை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியம். எனது குடும்பத்தில் இருந்து போன வருடம் ஒரு பையன் 685 மதிப்பெண் எடுத்து அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து இருக்கிறான். நீட் தேர்வானது அறிவை மட்டும் பொறுத்தது அல்ல. நிறைய பிராக்ட்டிஸ் வேண்டும். அதற்க்கு நல்ல கோச்சிங் செண்டரில் சேர்ந்தால் தான் முடியும். அதற்க்கு பணம் நிறைய செலவு செய்ய வேண்டும். நிறைய புத்தகங்கள் வாங்கி, அதில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க நிறையக் பிராக்ட்டிஸ் வேண்டும். ஒரு புத்தகத்தின் விலை 2000 ருபாய் இருக்கும். நாங்கள் 50 புத்தகங்களுக்கு மேல் வாங்கி இருக்கிறோம். நீட் படிப்புக்கு லட்சகணக்கில் செலவு செய்தோம். 700 .மார்க் எதிர் பார்த்தோம். அவன் ரொம்ப நல்லா படிக்கிற பையன் . 685 தான் கிடைத்தது AIMS டெல்லி எதிர்பார்த்தோம் கிடைக்கவில்லை. இப்போ அரசு மருத்துவ கல்லூரியில் டெல்லியில் படிக்கிறான். நீட் படிப்புக்கு அறிவு மட்டும் இல்லை. பணமும் முக்கியம். எங்களிடம் பணம் இருந்ததால் லட்சக்கணக்கில் செலவு செய்ததால் 685 மார்க் வாங்க முடிந்தது. ஏழை பிள்ளைகள் அறிவு இருந்தாலும் மறுத்தவர் ஆவது கடினம் சொல்ல போனால் நீட் எக்ஸாம் தேவை இல்லாதது. மருத்துவம் பணம் உள்ளவர்களுக்கு தான்
Rate this:
Cancel
14-செப்-202116:14:33 IST Report Abuse
Prasanna Krishnan Marxist communist can get out from india. I dont think so they are good. If govt has shortage of funds, if any PSU is going on loss, no problem in giving to lease to private party to raise fund. Whats problem for these parties?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X