தமிழக தலைவர்களின் டுவிட்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக தலைவர்களின் டுவிட்

Added : செப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
தி.மு.க., வின் அரசியல் நாடகம் அம்பலமானது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம். இன்னொரு நாள், இன்னொரு பொய், அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு. விவசாய சட்டம் தவறா? சி.ஏ.ஏ., தவறா? நீட் தவறா? எங்கே தவறு?- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அந்தந்த மாநில மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற உரிய


தி.மு.க., வின் அரசியல் நாடகம் அம்பலமானது. தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம். இன்னொரு நாள், இன்னொரு பொய், அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் பொய்கள் மற்றும் புரட்டு. விவசாய சட்டம் தவறா? சி.ஏ.ஏ., தவறா? நீட் தவறா? எங்கே தவறு?- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.

பல மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு அந்தந்த மாநில மாணவர்கள் அதிகமான வாய்ப்புகளைப் பெற உரிய பயிற்சிகளைக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த அரைநுாற்றாண்டு காலமாக மொழி மற்றும் கல்வியை வைத்து ஒரு சில அரசியல் கட்சிகள் அரசியல் செய்கிறார்கள்.- கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் தலைவர்.

அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை ம.நீ.ம., வரவேற்கிறது. இந்த மாற்றம் தனியார் துறையிலும் நிகழவேண்டிய ஒன்று. சமத்துவத்தை நோக்கிய பாதையில் தளர்வின்றி பயணிப்போம்.- கமல், ம.நீ.ம., தலைவர்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக தடுப்பூசி செலுத்தியது இதுவே முதல் முறை. தமிழக அரசுக்கு பாராட்டுகள். உ.பி.,யில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தியதுதான் இந்திய சாதனை. அதை தமிழக அரசு விரைவில் முறியடிக்க வேண்டும்.- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்.

அரசுத் துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில் தமிழக அரசின் போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனும் அறிவிப்பை வி.சி., வரவேற்கிறது. தமிழக அரசு, முதல்வருக்கு நன்றி.- திருமாவளவன், வி.சி., தலைவர்.

பாரதியார் பாடலை பாடி அவர் நினைவு நுாற்றாண்டில் அஞ்சலி செலுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அவர் அறிந்துகொள்ள வேண்டிய பாரதியார் பாடல், "பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ - நாங்கள் சாகவோ" என்பதுதான். பொதுத்துறைகளை பொதுச் சொத்துக்களை காப்போம்.- பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X