ஊழல் புகார்: உ.பி.,யில் 470 அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்து உள்ளதாவது: மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த 'சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற
ZeroTolerance Policy, Uttar Pradesh Govt, Files Chargesheets, 470 Corrupt Officials, சகிப்புத்தன்மையற்ற கொள்கை, லஞ்சம், ஊழல், உபி, உத்தரப் பிரதேசம், அரசு அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அம்மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்து உள்ளதாவது: மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த 'சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, லக்னோ, மீரட், பாரய்லி, ஆக்ரா, அயோத்யா, கோராக்பூர், வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த தகவலின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல், லஞ்ச புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.


latest tamil news


அதில் 297 வழக்குகள் தீவிர விசாரணையாகவும், 467 வழக்குகள் வெளிப்படையாகவும் நடைபெற்றன. தற்போது லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முதல் கட்டமாக அதில் 207 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
15-செப்-202106:36:36 IST Report Abuse
 N.Purushothaman லஞ்சம் ஊழலுக்கு எதிரான ஸிரோ டாலரன்ஸ் மூலம் யோகிஜியின் நடவடிக்கை நல்ல சமுதாயத்த உருவாக்க வழிவகை செய்யும் ...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
15-செப்-202106:35:29 IST Report Abuse
 N.Purushothaman திருட்டு திராவிட சில்வண்டுங்க கதறதை பார்த்தால் ஜெலுசில் தேவைப்படும் போல .....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202122:13:50 IST Report Abuse
Ramesh Sargam குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரூபிக்கப்பட்ட அணைத்து அரசு அதிகாரிகளையும் பணியிலிருந்து நீக்க வேண்டும். மற்றும் சரியாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X