பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:இன்று (செப்.,14): தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி)
Nilgiris, Heavy Rain, Weather, நீலகிரி, கனமழை, வானிலை, ஆய்வு மையம்

சென்னை: ‛‛நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இன்று (செப்.,14): தென்மேற்கு பருவ காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 15ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்., 16 முதல் 18 வரை: கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news



சென்னையை பொறுத்தவரை


அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (சென்டிமீட்டரில்):
பந்தலுார் (நீலகிரி) 12 செ.மீ., தேவலா (நீலகிரி) 6 செ.மீ., சின்னக்கல்லார் (கோவை), வால்பாறை (கோவை) தலா 2 செ.மீ., சித்தார் (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோவை) தலா 1 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்


இன்று 14ம் தேதி: ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்


இன்று 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X