பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
வேலுார்: ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகள் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செப்.,15) தொடங்குகிறது. வேலுார்,

வேலுார்: ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகள் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (செப்.,15) தொடங்குகிறது. வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில் இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


எந்த பதவிகளுக்கு தேர்தல்:

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


எங்கு மனு தாக்கல் செய்ய வேண்டும்:

ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிகின்றவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். கிராம வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிகிறவர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.


தேர்தல் விதிகள் பொருந்தாது:

தேர்தல் நடக்கும் ஊரக பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அனுமதி இல்லாமல் பிரச்சாரம், சுவர் விளம்பரம், பேனர்கள் வைக்கக் கூடாது. ஆனால் வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் இந்த தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது.


டெபாசிட் விவரம்:

ஒவ்வொரு பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மனுவுடன் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். அதன்படி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சி., எஸ்.டி., பிரிவிவருக்கு தலா 300 ரூபாய், மற்றவர்களுக்கு 600 ரூபாய், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.சி., எஸ்.சி., க்கு 300 ரூபாய், மற்றவர்களுக்கு 600 ரூபாய், மாவட்ட கவுன்சிலர் எஸ்.டி., எஸ்.சி., க்கு 500 ரூபாய் மற்றவர்களுக்கு 1,000 ரூபாய், கிராம வார்டு உறுப்பினர் எஸ்.சி., எஸ்.டி., க்கு 100, மற்றவர்களுக்கு 200 ரூபாய் தொகை செலுத்த வேண்டும்.


2 கட்ட தேர்தல்:

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்டமாக அக்., 6ம் தேதி வேலுார் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜாபேட்டை ஒன்றியங்களும், திருப்பத்துார் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்துார் ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இரண்டாம் கட்டமாக அக்., 9 ம் தேதி வேலுார் மாவட்டத்தில், அணைக்கட்டு, கணியம்பாடி, வேலுார் ஒன்றியங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர் ஒன்றியங்களிலும், திருப்பத்துார் மாவட்டத்தில் ஆலங்காயம், மாதனுார் ஒன்றியங்களிலும் தேர்தல் நடக்கிறது.


அதிகாரிகள் நியனம்:

3 மாவட்டங்களிலும் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அலுவலர்கள் ஓடபுப்பதிவு பணியில் ஈடுபடுகின்றனர். 41 ஆயிரத்து 500 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேர்தலை கண்காணிக்க நியமிக்க்கபட உள்ளனர்.


4 கலரில் ஓட்டு சீட்டு

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல் ஒரே நேரத்தில் நடப்பதால் 4 வண்ணத்தில் ஓட்டு சீட்டுக்கள் பயன்படுத்தப்படும். 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் ஒரு ஓட்டுச் சாவடியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு இரண்டு வண்ணங்களில் ஓட்டுச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.


எத்தனை பதவிகளுக்கு தேர்தல்:

வேலுார் மாவட்டத்தில், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 247 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2,079 ஊராட்சி கவுன்சிலர்கள், 14 மாவட்ட கவுன்சிலர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சி மன்ற தலைவர்கள், 127 ஒன்றிய கவுன்சிலர்கள், 2,230 ஊராட்சி கவுன்சிலர்கள், 13 மாவட்ட கவுன்சிலர்களுக்கும், திருப்பத்துார் மாவட்டத்தில், 125 ஒன்றிய கவுன்சிலர்கள், 13 மாவட்ட கவுன்சிலர்கள், 208 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 1,579 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.


பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகள்:

வேலுார் மாவட்டத்தில் 252, திருப்பத்துார், 230, ராணிப்பேட்டை மாவட்டத்தில், 340 ஓட்டுச் சாவடிகள் பதட்டம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


சோதனை சாவடிகள்:

வேலுார்- திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலும், திருப்பத்துார்- தர்மபுரி, வாணியம்பாடி- கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை- காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளிலம், தமிழக- ஆந்திரா மாநில எல்லைகளிலும் 50 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்படுகின்றது. பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 1,200 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் திருமணம் தவிர மற்ற நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. ஊராட்சி தலைவர் பதவிகள் ஏலம் விடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X