பொது செய்தி

தமிழ்நாடு

ம.ஜ.க., பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரிக்கை

Added : செப் 14, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி மனித நேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற மக்கள் கண்காணிப்பகம் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறினார்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளரான வசீம் அக்ரம், 40, கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்தை இன்று ஆய்வு செய்த

வாணியம்பாடி: வாணியம்பாடி மனித நேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற மக்கள் கண்காணிப்பகம் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கூறினார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளரான வசீம் அக்ரம், 40, கடந்த 10ம் தேதி இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் படுகொலை செய்யப்பட்டார். அந்த இடத்தை இன்று ஆய்வு செய்த பின்னர் ஆசீர்வாதம் நிருபர்களிடம் கூறியதாவது: உளவுத்துறை முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் வசீம் அக்ரம் கொலையை தடுத்திருக்கலாம். இந்த கொலை வழக்கு தொடர்பாக எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தக்கூடாது. சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்ற வேண்டும். தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி, அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X