சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்காடு அருகே 3 வீடுகளில் நகை, பணம், பட்டு சேலைகள் திருட்டு

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆற்காடு: ஆற்காடு அருகே, மூன்று வீடுகளில் பணம், நகை, பட்டு சேலைகள் திருட்டு போனது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முதல் தெருவில் கன்னியப்பன், 43. இவர் ஆரணியில் உள்ள தனியார் பேங்க்கில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த வீடுகளில் வசிக்கும்
ஆற்காடு அருகே 3 வீடுகளில் நகை, பணம், பட்டு சேலைகள் திருட்டு

ஆற்காடு: ஆற்காடு அருகே, மூன்று வீடுகளில் பணம், நகை, பட்டு சேலைகள் திருட்டு போனது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரி சஞ்சீவிராயன் பேட்டையில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு முதல் தெருவில் கன்னியப்பன், 43. இவர் ஆரணியில் உள்ள தனியார் பேங்க்கில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அடுத்த வீடுகளில் வசிக்கும் சுந்தரமூர்த்தி, 45, வெங்கடேசன், 35, பட்டு சேலை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 12 ம் தேதி மூவரும் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றனர். இன்று காலை மூவரும் வந்தனர். மூன்று பேர் வீட்டு பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதில், கன்னியப்பன் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை திருடு போனது. சுந்தரமூர்த்தி வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள எட்டு பட்டுப் புடவைகள், 50 ஆயிரம் ரூபாய், வெங்கடேசன் வீட்டில் உள்ள பீரோவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து திமிரி போலீசார் கூறியதாவது: மூன்று வீடுகள் பூட்டியிருப்பதையறிந்த திருடர்கள் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு பின்பக்க கதவை உடைத்து திருடிக் கொண்டு அடுத்துள்ள சிவா, மணிகண்டன் வீடுகளில் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த போது சத்தம் கேட்டு பொது மக்கள் வந்ததால், மர்ம நபர்கள் தப்பிவிட்டனர். திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X