நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் சிறை தகர்ப்பு; 240 கைதிகள் தப்பியோட்டம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
அபுஜா: நைஜீரியா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, அங்கிருந்த 240 கைதிகளை பயங்கரவாதிகள் தப்பவைத்துள்ளனர்.நைஜீரியாவின் கோகி மாகாணத்தின் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்., 12) இரவு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து
Nigeria, Gunmen Stormed, Jail, Nigerian Prison, Terrorist, Criminal Gangs, நைஜீரியா, பயங்கரவாதிகள், சிறை தகர்ப்பு, கைதிகள், தப்பியோட்டம்

அபுஜா: நைஜீரியா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, அங்கிருந்த 240 கைதிகளை பயங்கரவாதிகள் தப்பவைத்துள்ளனர்.

நைஜீரியாவின் கோகி மாகாணத்தின் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்., 12) இரவு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, 240 கைதிகளை தப்பவைத்து உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ கூறியதாவது: கெப்பா சிறைச்சாலையில் இருந்த 294 கைதிகளில், 224 பேர் விசாரணைக் கைதிகள்; 70 பேர் குற்றவாளிகள். இதில், 240 பேர் தப்பியுள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை 'இண்டர்போல்' அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளோம்.


latest tamil news


ஒருவேளை நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடித்து விடுவோம். தாக்குதலில் ஈடுபட்டு பெரிய சேதாரத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு போலீசாரையும் கொன்ற பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், நைஜீரியால் கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 1,800 கைதிகளை தப்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202106:06:16 IST Report Abuse
இவன் உள்ளூர்ல அண்ணா பிறந்த னாள் னு சொல்றன், அவளோ தான் வித்யாசம்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-செப்-202122:25:27 IST Report Abuse
Rasheel மூர்கர்களின் அநியாயம் உலகம் முழுவதும் தொடர்கிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202122:10:51 IST Report Abuse
Ramesh Sargam கண்ணன் அவர்களின் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன். சோ (so), நம்ம 'விக்' தலைவருக்கு நைஜீரியா நாட்டின் அதிபர் ஆகும் தகுதியும் இருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X