சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்காலிக மின் இணைப்புக்கு 2 ஆயிரம் லஞ்சம்? மின்வாரிய உதவி பொறியாளரிடம் விசாரணை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: அவிநாசியில் தற்காலிக மின் இணைப்புக்கு, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக, மின்வாரிய உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூரை அடுத்த அவிநாசி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக தில்ஷத் பேகம்(36) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் தற்காலிக மின் இணைப்பு பெற, 2 ஆயிரம் முதல், 4 ஆயிரம் ரூபாய் வரை

திருப்பூர்: அவிநாசியில் தற்காலிக மின் இணைப்புக்கு, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது தொடர்பாக, மின்வாரிய உதவி பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த அவிநாசி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக தில்ஷத் பேகம்(36) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் தற்காலிக மின் இணைப்பு பெற, 2 ஆயிரம் முதல், 4 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

இச்சூழலில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுரி, 45 என்பவர், அவிநாசி, ராக்கியபாளையத்தில் வீடு கட்டுவதுக்காக, தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். இதற்காக, 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையிலான குழுவினர் மின்வாரிய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு, உதவி பொறியாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அவிநாசியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X