தேர்வு நடக்கும்... அனைவரும் ‛ஆல் பாஸ்': பாக்., கல்வி அமைச்சர் அறிவிப்பு

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: கோவிட் வைரஸ் பரவலால் பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில், மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிப்பதாக பாகிஸ்தான் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் மாகாணங்களின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அரசு ஒருங்கிணைத்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் தலைமை வகித்தார். அப்போது அனைத்து மாகாண கல்வி அமைச்சர்களுமே
Covid Crisis, Pakistan, No Fail, Student, Education Body Decides, கோவிட் பாதிப்பு, கொரோனா, ஊரடங்கு, கல்வி பாதிப்பு, பாகிஸ்தான், மாணவர்கள், ஆல் பாஸ், கல்வி அமைச்சர், அறிவிப்பு

இஸ்லாமாபாத்: கோவிட் வைரஸ் பரவலால் பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில், மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிப்பதாக பாகிஸ்தான் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் மாகாணங்களின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அரசு ஒருங்கிணைத்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் தலைமை வகித்தார். அப்போது அனைத்து மாகாண கல்வி அமைச்சர்களுமே 'மெட்ரிக், இன்டர்மீடியட் தேர்வுகளுக்குத் தயாராவதில் மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது. இதனால் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.


latest tamil news


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் கூறுகையில், 'மாணவர்கள் தேர்ச்சியடையத் தவறும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு 33 சதவீத மதிப்பெண் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படமாட்டாது. மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்துக்கு இடையேயும் முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும். வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் திறக்கப்படும்' என்றார்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202120:33:44 IST Report Abuse
Ramesh Sargam நான் நினைக்கிறேன் இந்த பாகிஸ்தான் கல்வி அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாடு பக்கம் வந்து போயிருப்பார் என்று ‛ஆல் பாஸ்' - படித்தவனும் பாஸ், படிக்காதவனும் பாஸ், ஏன் இன்னும் சொல்லப்போனால் இந்த கொரானா நேரத்தில் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவானும் பாஸ். சூப்பர். நல்லா வருவீங்க...
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
14-செப்-202119:33:20 IST Report Abuse
SKANDH பாகிஸ்தான்டா ? நமது குட்டி இம்ரான்கான் பாக்கிஸ்தான் சொன்னதில் பாதி புரிந்து கொண்டாரா? மாட்டார். இவருக்கு தனக்கும் தனது குடும்பத்துக்கும் வராதா கல்வி யாருக்கும் இருக்கக்கூடாது. இவன் கலை தேர்ந்தெடுத்த தமிழகமே அனுபவி .
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-செப்-202119:32:31 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan திராவிட நாகரீகம் பாகிஸ்தானிலும் பரவுகிறது. சூபர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X