காந்தஹாரில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
காந்தஹார்: காந்தஹாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.ஆப்கனின் காந்தஹாரின் தெற்கு பகுதியில் உள்ள பகுதியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின்
காந்தஹார், தலிபான்கள், போராட்டம், ராணுவ வீரர்கள், ஆப்கன், ஆப்கானிஸ்தான்

காந்தஹார்: காந்தஹாரில் உள்ள காலனியில் வசிப்பவர்களை வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

ஆப்கனின் காந்தஹாரின் தெற்கு பகுதியில் உள்ள பகுதியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும், முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள். 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் அவர்களை 3 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


latest tamil news



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தஹார் கவர்னர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களில் பலர் சாலையை மறித்து போராட்டம் நடத்தியதாக அந்நாட்டு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க தலிபான்கள் மறுத்துவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம். அப் பாவி மக்களை தல்லிபான்களுக்கு எதிராக. தூண்டிவிட்டது யூதர்களாக இருக்கக் கூடும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-செப்-202122:06:17 IST Report Abuse
Ramesh Sargam போராட்டத்திற்கு செவி மடுப்பவர்களா இந்த தலிபான்கள். நல்லவேளை போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யவில்லை.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-செப்-202120:46:06 IST Report Abuse
A.George Alphonse இந்த தீவிர வாதிகள் இந்த நாட்டை ஒருவழி பண்ணாமல் ஓயமாட்டார்கள் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X