பொது செய்தி

இந்தியா

கேரளா உட்பட 11 மாநிலங்களுக்கு ரூ.15,721 கோடி கூடுதல் கடன்: மத்திய அரசு

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 2021 - 22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவை எட்டியுள்ள கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் கூடுதலாக 15,721 கோடி ரூபாய் கடனாகப் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தால் 2021 - 22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை ஆந்திரா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான்
Finance Ministry, Gives Nod, 11 States, Borrow, Additional Rs15721cr, மூலதனச்செலவு, கேரளா, 11 மாநிலங்கள், மத்திய அரசு, ஒப்புதல்,

புதுடில்லி: 2021 - 22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவை எட்டியுள்ள கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் கூடுதலாக 15,721 கோடி ரூபாய் கடனாகப் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தால் 2021 - 22 முதல் காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான மூலதனச் செலவை ஆந்திரா, பீஹார், சத்தீஸ்கர், ஹரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 11 மாநிலங்கள் எட்டியுள்ளன. இதையடுத்து, அம்மாநிலங்களுக்கு ஊக்கத்தொகையாக கூடுதலாக ரூ.15,721 கோடி கடனாகப் பெற, மத்திய நிதி அமைச்சக செலவினத்துறை அனுமதி அளித்துள்ளது.


latest tamil news


மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் உதவிகரமாக இருக்கும். கூடுதல் கடனைப் பெறுவதற்கு 2021-22ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த இலக்கில் 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 45 சதவீதத்தை இரண்டாவது காலாண்டிலும் 70 சதவீதத்தை மூன்றாவது காலாண்டிலும், மார்ச் 31, 2022ல் 100 சதவீத இலக்கையும் மாநிலங்கள் அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-202118:23:43 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக மத்திய அரசு🤔 அனுமதித்த 5000 கோடி வட்டியில்லா கடனைப் பயன்படுத்த ஸ்டாலின் அரசு முயற்சியே எடுக்கவில்லை. ஆனால் வெளிக் கடனாக 20000 கோடி அதிக வட்டிக்கு வாங்குகிறார்கள். விடியல்🥲 அப்படித்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X