பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகத்தை இடம் மாற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: அலுவலகத்தை மாற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் கலெக்டர் அலுவலக தரைதளத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இடநெருக்கடி காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் அலுவலகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரை கி.மீ., தூரத்துக்கு

நாமக்கல்: அலுவலகத்தை மாற்றக்கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் கலெக்டர் அலுவலக தரைதளத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்தது. இடநெருக்கடி காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் அலுவலகம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரை கி.மீ., தூரத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்துக்கு மாற்று திறனாளிகள் சென்று வருவதில் சிரமம் இருந்தது. பல்வேறு போராட்டத்துக்கு பின் மோட்டார் வாகனம் மூலம், அலுவலகத்துக்கு அழைத்து சென்று வருகின்றனர். இருந்தும் முன்பு செயல்பட்டு வந்த அலுவலகத்துக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன், கொளுத்தும் வெயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சிணாமுர்த்தி, டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து, கலெக்டர் ஸ்ரேயா சிங் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில், மாவட்ட கருவூல அலுவலகம் அருகில், ஒரு வாரத்திற்குள் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்ததாக சங்க தலைவர் பழனிவேல் தெரிவித்தார். அதையடுத்து, ஐந்து மணி நேரமாக நடந்த காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X