பொது செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

Added : செப் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: திருச்செங்கோடு தாலுகா, செட்டிசாலபாளையம் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: திருச்செங்கோடு தாலுகா, போக்கம்பாளையம் கிராம பகுதியில், சித்தாளந்தூர் முதல், குமாரமங்கலம் செல்லும் சாலையில் போக்கம்பாளையம், தீர்த்தாங்காடு பகுதி விவசாய நிலத்தில் அரசு மதுக்கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சாலை வழியாக, மாணவ, மாணவியர் சென்று

நாமக்கல்: திருச்செங்கோடு தாலுகா, செட்டிசாலபாளையம் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம்: திருச்செங்கோடு தாலுகா, போக்கம்பாளையம் கிராம பகுதியில், சித்தாளந்தூர் முதல், குமாரமங்கலம் செல்லும் சாலையில் போக்கம்பாளையம், தீர்த்தாங்காடு பகுதி விவசாய நிலத்தில் அரசு மதுக்கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சாலை வழியாக, மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். போக்கம்பாளையம், சமுத்திரபாளையம், சித்தாளந்தூர், குமாரமங்கலம், 87 கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு அதிக அளவில் மக்கள் சென்று வருகின்றனர். டாஸ்மாக் கடை அமைந்தால், பொது அமைதி கெடுவதுடன், மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X