பொது செய்தி

தமிழ்நாடு

விதை நெல் வாங்க விவசாயிகள் ஆர்வம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகள் விதை நெல்லை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் கடந்த ஆக, 1 முதல் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பள்ளி பாளையம் வட்டாரத்தில் எலந்தகுட்டை, களியனூர், சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், சின்னார்பாளையம், ஆலாம்பாளையம், தெற்குபாளையம் மற்றும் பல பகுதிகளில், 10

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகள் விதை நெல்லை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் கடந்த ஆக, 1 முதல் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பள்ளி பாளையம் வட்டாரத்தில் எலந்தகுட்டை, களியனூர், சமயசங்கிலி, மோளகவுண்டம்பாளையம், சின்னார்பாளையம், ஆலாம்பாளையம், தெற்குபாளையம் மற்றும் பல பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கும். விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள் பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனர் கலைச்செல்வி கூறியதாவது: ஐ.ஆர் 20- 5,377 கிலோ; பொன்னி, 1,250 கிலோ; டி.கே.,எம்., 2,000 கிலோ; கோ 51- 3,000 கிலோ; பி.பி.டி., 5,000 கிலோ இது வரை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X