பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் உள்பட 25 பதவிகளுக்கு அக்., 9ல் தேர்தல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில், 2019ல், டிச., 27, 31 என, இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒன்பது மாவட்டங்களில், தேர்தல் நடத்தவில்லை. தற்போது, 'ஒன்பது மாவட்டங்களிலும், அக்., 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து மற்ற மாவட்டங்களில், காலியாக உள்ள மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி

நாமக்கல்: தமிழகத்தில், 2019ல், டிச., 27, 31 என, இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒன்பது மாவட்டங்களில், தேர்தல் நடத்தவில்லை. தற்போது, 'ஒன்பது மாவட்டங்களிலும், அக்., 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் சேர்த்து மற்ற மாவட்டங்களில், காலியாக உள்ள மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பதவிக்களுக்கும், அக்., 9ல் தேர்தல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், 6வது வார்டு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி (பொது), எருமப்பட்டி ஒன்றியத்தில், 15வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவி (பொது), காலியாக உள்ள கோப்பணம்பாளையம், திம்மநாயக்கன்பட்டி, ஆவல்நாயக்கன்பட்டி, கூடச்சேரி, நடுகோம்பை ஊராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு, அக்., 9ல் உள்ளாட்சிதேர்தல் நடக்கிறது. மேலும், கிராம ஊராட்சிகளில், மண்டகபாளையம், 3வது வார்டு, கோணங்கிப்பட்டி, 9வது வார்டு, பவித்திரம், 2வது வார்டு, இருக்கூர், 7வது வார்டு, தின்னனூர்நாடு, 5வது வார்டு. பிள்ளாநத்தம், 4வது வார்டு, என்.புதுப்பட்டி, 8வது வார்டு, பெரப்பஞ்சோலை, 2வது வார்டு, கார்கூடல்பட்டி, 6வது வார்டு, மங்களபுரம், 8வது வார்டு, செருக்கலை, 9வது வார்டு, பில்லூர், 4வது வார்டு. காரைக்குறிச்சிபுதூர், 3வது வார்டு, எஸ்.உடுப்பம், 6வது வார்டு, திருமலைப்பட்டி, 7வது வார்டு, பொட்டணம், 3வது வார்டு, உத்திரகிடிகாவல், 7வது வார்டு, ஆண்டிபாளையம், 6வார்டு என, மொத்தம், 25 பதவிகளுக்கு, தேர்தல் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X