பொது செய்தி

தமிழ்நாடு

கேதார கவுரி வழிபாடு நாளை தொடக்கம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதார கவுரி விரத சிறப்பு வழிபாடு, நாளை துவங்குகிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிவனும் பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பார்வதிதேவி சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதார கவுரி விரத வழிபாட்டு சிறப்பு பூஜை நாளை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் கேதார கவுரி விரத சிறப்பு வழிபாடு, நாளை துவங்குகிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிவனும் பார்வதியும் ஒரு உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பார்வதிதேவி சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதார கவுரி விரத வழிபாட்டு சிறப்பு பூஜை நாளை துவங்குகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்கு முனதின்ம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு பூஜை துவங்கி நடத்தப்படுவது வழக்கம். அதில், 21 நாட்களும், 21 விதமான பட்சணங்களை படையலிட்டு வழிபாடு செய்யப்படும். அமாவாசைக்கு முன்தினம், ஆவாகணம் செய்யப்பட்டு, தினமும் பூஜை செய்யப்பட்டு வரும் கலசதீர்த்தம் கோவிலை வலம் வந்து, வரலாற்று பெருமை கொண்ட கடலை தின்ற நந்தீஸ்வரருக்கு தீர்த்தாபிஷேகம் செய்யப்படும். திருமணத்தடை நீங்குதல்,குடும்ப ஒற்றுமை மேம்படுதல் என பக்தர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X