பொது செய்தி

தமிழ்நாடு

இலவச குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி துவக்கம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில், நேற்று துவங்கி, வரும், 18 வரை முதல் சுற்றும், 20 முதல், 25 வரை, இரண்டாம் சுற்றும், வரும், 27 ல் விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில், முதல் வயது முதல், 19 வயது வரை உள்ள, ஐந்து லட்சத்து, 89 ஆயிரத்து, 401 பேருக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில், நேற்று துவங்கி, வரும், 18 வரை முதல் சுற்றும், 20 முதல், 25 வரை, இரண்டாம் சுற்றும், வரும், 27 ல் விடுபட்ட குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடக்கிறது. மாவட்டத்தில், முதல் வயது முதல், 19 வயது வரை உள்ள, ஐந்து லட்சத்து, 89 ஆயிரத்து, 401 பேருக்கும், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத, ஒரு லட்சத்து, 53 ஆயிரத்து, 830 பெண்களுக்கும், குடற்புழு நீக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்குவதற்கான துவக்க விழா, எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியருக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசியதாவது: ரத்த சோகை நோய்க்கு முக்கிய காரணியாக விளங்கும் குடற்புழுவை நீக்க ஆண்டு தோறும், மாணவ, மாணவியருக்கு, இரண்டு முறை, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. தமிழக அரசால் வழங்கப்படும் இரும்புச் சத்து மாத்திரைகளை, மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தவறாமல் சாப்பிட வேண்டும். அதனால், ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் முடியும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து குடற்புழு நீக்க கையேட்டை கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பெற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X