பொது செய்தி

தமிழ்நாடு

காசநோய் மையத்தில் மருத்துவ அலுவலர், ஆய்வக மேற்பார்வையாளர் பணி வாய்ப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம் காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரிய மருத்துவ அலுவலர், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், தலா, ஒன்று, ஆய்வக நுட்புனர், நான்கு, ஆகிய பணியாளர்களை, 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க, மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட நலச்சங்கம் காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரிய மருத்துவ அலுவலர், முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர், தலா, ஒன்று, ஆய்வக நுட்புனர், நான்கு, ஆகிய பணியாளர்களை, 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்க, மாநில நலச்சங்கம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு கல்வித்தகுதி எம்.பி.பி.எஸ்., முடித்திருக்க வேண்டும். தொகுப்பூதியம், 45 ஆயிரம் ரூபாய். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணியிடத்துக்கு பட்டப்படிப்புடன், டி.எம்.எல்.டி., பட்டய படிப்பு மற்றும் அதனுடன், இரண்டு மாத கணினி பயிற்சி சான்றிதழ், நிரந்தர இருசக்கர வாகன ஓட்டுன உரிமம் பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம், 15 ஆயிரம் ரூபாய். ஆய்வக நுட்புனர் பணியிடத்துக்கு பிளஸ் 2 சான்றிதழுடன், டி.எம்.எல்.டி.,/சி.எம்.எல்.டி., பட்டய படிப்பு மற்றும் அதனுடன், இரண்டு மாத கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொகுப்பூதியம், 10 ஆயிரம் ரூபாய். தகுதியுள்ள நபர்கள், தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், 'துணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம், மோகனூர் சாலை, நாமக்கல் -637001' என்ற முகவரிக்கு, வரும், 28 மாலை, 5:00 மணிக்குள் வழங்க வேண்டும். விபரங்களுக்கு, 04286 292025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X