பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் நேற்று அதிகரித்தது.மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன், 12 முதல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 11 வரை வினாடிக்கு, 5,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் அளவு நேற்று

கரூர்: மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து மீண்டும் நேற்று அதிகரித்தது.


மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன், 12 முதல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 11 வரை வினாடிக்கு, 5,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம், திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் அளவு நேற்று அதிகரித்தது. நேற்று முன்தினம் மாயனூர் கதவணைக்கு, 6,860 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 13 ஆயிரத்து, 172 கன அடியாக அதிகரித்தது. இதனால், குறுவை சாகுபடிக்காக, 12 ஆயிரத்து, 152 அடி தண்ணீர் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட நான்கு பாசன வாய்க்கால்களில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையிலிருந்து கடந்த, 24 முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 11ம் தேதி, 550 கன அடி திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணி நிலவரப்படி திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 400 அடியாக குறைக்கப்பட்டது. நேற்றும், அதே நிலை தொடர்ந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.52 அடியாக இருந்தது. அணைக்கு, 336 கன அடி தண்ணீர் வந்தது.

கரூர் மாவட்ட மழை நிலவரம்: தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு காரணமாக, மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால், கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் மழை இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X