பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழையால் சாகுபடி உயர்வு: முருங்கை விதை விலை அதிகரிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கரூர்: தொடரும் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், முருங்கை விதையின் விலை உயர்ந்துள்ளது.தமிழகளவில், நெட்டு முருங்கை ரகம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சேந்தமங்கலம் கீழ்பாகம், சேந்தமங்கலம் மேல்பாகம், நாகம்பள்ளி, இனங்கனூர், மொடக்கூர் மேல்பாகம்,

கரூர்: தொடரும் மழை காரணமாக, கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது. இதனால், முருங்கை விதையின் விலை உயர்ந்துள்ளது.


தமிழகளவில், நெட்டு முருங்கை ரகம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, சேந்தமங்கலம் கீழ்பாகம், சேந்தமங்கலம் மேல்பாகம், நாகம்பள்ளி, இனங்கனூர், மொடக்கூர் மேல்பாகம், மொடக்கூர் கீழ்பாகம், கோவிலூர், சாந்தப்பாடி, தெத்துப்பட்டி, புங்கம்பாடி கீழ்பாகம், புங்கம்பாடி மேல்பாகம், ஈசநத்தம் உள்பட, 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில், 250 மேற்பட்ட கிராமங்களில், 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. சீசன் காலத்தில், எட்டு டன் முருங்கை அறுவடை செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி பகுதியில் சாகுபடி செய்யப் படும் செடி முருங்கை, விதை முருங்கை மற்றும் ஒட்டு ரக முருங்கை ஆகியவற்றின் காய்கள் நீளமாக, திரட்சியுடன் ருசியாக இருக்கும். இதனால், இந்த பகுதிகளில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்த மழை காரணமாக மானாவரி நிலங்களில் முருங்கை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், முருங்கை விதைக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், நிலத்தடி நீர் குறைந்ததால், போர்வெல் குழாய்களிலும் தண்ணீர் இல்லை. மானாவாரி நிலங்களில் முருங்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும், முருங்கைக்கு அதிகளவில் விலை கிடைக்காததால் காயை விவசாயிகள் அறுவடை செய்யாமல் விட்டு விட்டனர். அந்த காய்கள் நன்கு காய்ந்து, விதைகளாக மாற்றம் செய்யப்பட்டன. விதைக்கு கிலோவுக்கு, 500 ரூபாய்க்கும் குறைவாக அப்போது கிடைத்தது. இந்நிலையில், தற்போது பெய்துள்ள தென் மேற்கு பருவ மழை காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. முருங்கை சாகுபடி அரவக்குறிச்சி வட்டாரத்தில் மீண்டும் துவங்கியுள்ளது. இதனால், விதைக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. கருப்பு மற்றும் வெள்ளை நிற விதைகள் கடந்த வாரம், ஒரு கிலோ, 750 ரூபாய் வரை விலை போனது. பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக பனிப்பொழிவு காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து விடும். சாகுபடி குறைவால், தை மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடக்கும்போது, முருங்கைக்கு அதிக விலை கிடைக்கும். தற்போது, விதைக்கும் அதிக விலை கிடைக்கும் நிலையில், அடுத்த ஐப்பசி, கார்த்திகை மாதம் முருங்கைக்கும் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X