பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு ஓட்டுச்சாவடி மைய பட்டியல் வெளியீடு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டார்.அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் வகையில், 1,040 வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டார்.


அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை மறுவரையறை செய்திடும் வகையில், 1,040 வரைவு ஓட்டுச்சாவடி மையங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ஏற்கனவே, 1,032 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ள நிலையில், 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து, 2 கி.மீ., தூரத்திற்கும் அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், அரவக்குறிச்சி தொகுதிக்கு, 2; கரூருக்கு, 4; கிருஷ்ணராயபுரத்துக்கு, இரண்டு மையங்கள் கூடுதலாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக கலெக்டர் அலுவலகம், கரூர் மற்றும் குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் வைக்கப்படும். இது குறித்த முறையீடுகள், கோரிக்கைகளை வரும், 20க்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். டி.ஆர்.ஓ., லியாகத், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X