பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிக்கு இலவச வாகனம்: கரூர் கலெக்டர் உத்தரவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டரின் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொளி வாயிலாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். நேற்றைய கூட்டத்தில், 21 தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில்

கரூர்: கரூர் கலெக்டரின் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொளி வாயிலாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். நேற்றைய கூட்டத்தில், 21 தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். கொரோனா பரவல் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்களை பெறுவது இல்லை. அங்குள்ள பெட்டியில் மனுக்களை போட்டு செல்கின்றனர். இருந்த போதும், சில மாற்றுத்திறனாளிகளும் வந்துசெல்வதை கலெக்டர் பிரபுசங்கர் கவனித்துள்ளார். வளாக வாயிலில் இருந்து அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகளை இலவசமாக அழைத்துவர ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், பிரதான சாலையில் கலெக்டர் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல ஏதுவாக இரண்டு ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X